Thursday, 11 February 2021

ஏழை பங்காளன் என்னும் சொல்

 'ஏழை பங்காளன்' புகழ்வதற்குரிய சொல் தானா?


தற்காலத்தில் சமுதாயப் பணி செய்பவர்களையும், ஏழை

எளியோர்க்கு உறுதுணையாகத் திகழ்பவர்களையும், அர

சியல் தலைவர்களையும் 'ஏழை பங்காளர்' என்ற சொல்லால்

புகழ்கின்றார்கள்.  உண்மையிலேயே  இது புகழ்வதற்குரிய

சொல் தானா? என்று ஆராய்வோம்.


'ஏழை பங்காளன்' என்ற சொல் பக்தி இலக்கியத்தில் மாணிக்க

வாசகர் இயற்றிய திருவெம்பாவைப் பாடல் தொகுப்பில் சிவ

பெருமானைக் குறிப்பிடும் சொல்லாகப் பயன்படுத்தப் பட்டுள்

ளது. இது தொடர்பான வரிகள் பின்வருமாறு:

"ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்"

என்ற வரிகளில் சிவ பெருமான் 'ஏழை பங்காளன்' என்று குறிப்

பிடப்பட்டுள்ளார். தன் உடம்பில் சரிபாதியை  உமையம்மையுடன்

பகிர்ந்து கொண்டவன் என்பதுதான் பொருள். ஏழை  என்பது பெண்

என்னும் பொருளைத்தரும். இங்கே உமையம்மையைக் குறிக்கும்.

மற்றபடி 'ஏழைகளின் துணைவன் அல்லது காவலன் அல்லது தோழன்

என்ற பொருளைத் தராது. சைவ சமயக் கோட்பாடுகளின்படி சிவன்

தன் உடம்பின் இடப் பாகத்தைச் சக்திக்குக் கொடுத்தாகச் சொல்லப்

படுகிறது. பக்தி இலக்கியத்தில் சைவ சமயப்  பெரியோர்களாகிய

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர்

தங்கள் பாடல்களில் இந்தச் செய்தியைப் பாடியுள்ளனர். 


திருஞான சம்பந்தர் திருவையாற்றுப் பதிகத்தில்

"கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை

பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர்" எனப் பாடி

யுள்ளார். திருநாவுக்கரசர் திருத்தில்லைப் பதிகத்தில்

"மதுர வாய் மொழி மங்கை ஓர் பங்கினன்" எனப் பாடியுள்

ளார். சுந்தரர் திருமுருகன் பூண்டிப் பதிகத்தில் "வேய்ந்த

வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து உகந்தீர்"

என்று சிவனைக் குறிப்பிடுகின்றார். மாணிக்க வாசகர் திரு

அம்மானைப் பதிகத்தில் "பெண்சுமந்த பாகத்தான்" என்று

சிவனை வருணிக்கின்றார். கம்பர் தமது இராம காதையில்

"பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்"

என்று சிவன் தமது இடப் பாகத்தில் உமையம்மையை வைத்த

தையும், திருமால் இலட்சுமியைத் தமது மார்பில்(ஆகம்) வைத்த

தையும், பிரம்மன் கலைமகளைத் தமது நாவில் வைத்ததையும்

குறிப்பிடுகின்றார். சைவ சமயத்தில் சிவன் தமது உடம்பில் சரி

பாதியை(இடப் பாகம்) உமையம்மைக்குக் கொடுத்ததால்  அச்சமயப்

பக்தி இலக்கியங்களில் ஏழை(பெண்)க்குப் பங்களித்தான்,  பெண்

ணுக்குப் பாகம் தந்தான், மாது ஒரு கூறுடைய பிரான் என்று பல

வாறாகப் போற்றப் படுகிறார். அர்த்த நாரித் தத்துவம் இந்தக் கருத்

தின் வெளிப்பாடே.


இப்படியாகப் பக்தி இலக்கியத்தில் சைவசமயத் தலைவனான

சிவனை வருணிக்கப் பயன்படுத்தப்பட்ட 'ஏழை பங்காளன்' என்ற

சொல்  தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு ஏழைகட்கு உறுதுணை

யாகப் பணி செய்வோரைக் குறிக்கப் பயன்படுகிறது. இந்த மாதிரிப்

பயன்பாடு ஏழைகளின் சொத்தைப் பங்கு போட்டவன் என்ற பொரு

ளைத் தரும். இதன் விளைவு என்னவென்றால் புகழ்வதற்குப் பதில்

பழிப்பது போலாகிவிடும். அதாவது, ஏழைகளிடம் இருக்கும் கொஞ்ச

நஞ்சப் பொருள்களை அல்லது சொத்தைப் பங்கு போடுதல் என்ற

தவறான அர்த்தம் பிறக்க வழிவகுக்கும். எனவே, பாராட்டுரையில்

ஏழைகளுக்கு உதவும்  சமூகத் தொண்டர்களையும் அரசியல் தலைவர்

களையும்  புகழும் போது ''ஏழைகளின் பாதுகாவலன்' அல்லது 'ஏழை

களின் தோழன்'  அல்லது ஏழைகளின் புரவலன் என்று குறிப்பிடலாம்.

'ஏழை  பங்காளன்' என்ற சொல்லைத் தவிர்த்து விடலாம்.