அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.
குறுந்தொகையில் பயின்றுவரும் ஒரு நயமிக்க பாடலைப்
பார்ப்போம். பாடல் எண்:41; புலவர்:அணிலாடு முன்றிலார்;
திணை: பாலைத்திணை.
தலைவி யொருத்தியும் அவள் தோழியும் உரையாடுகின்ற
காட்சி. சில நாட்களாகத் தலைவி சரிவர உண்ணுவதில்லை;
உறங்குவதில்லை. மொத்தத்தில் இயல்பாக அவள் நடக்கவில்
லை. அவள் நடவடிக்கையில் ஒருவிதமான சோர்வும், துயரமும்
தென்படுகின்றன. தோழிக்குக் காரணம் தெரியும். ஏனெனில்,
தலைவியின் வயதொத்தவள் தானே தோழி. பருவப் பெண்
களுக்கு ஏற்படும் காதல் நோய் காரணமாகவே தலைவியான
வள் துயரடைகின்றாள் என்பதனை நன்கு அறிவாள். இருப்
பினும், வழக்கமாக விசாரிப்பது போல ஏன் சோர்வாகத் தென்
படுகின்றாய் என்று தலைவியிடம் வினவுகின்றாள். உடனே
தலைவி கீழ்க்கண்டவாறுவிடையளிக்கின்றாள்;
"காதலர் உழையர் ஆகப் பெரி(து)உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்(பு)இல் போலப் புல்லென்(று)
அலப்பென் தோழி, அவர், அகன்ற ஞான்றே!"
பொருளுரை(யான் இயற்றிய கவிதைகள்):
"காதலர் அருகில் உள்ளார்;
கண்களால் நோக்கு கின்றார்;
தீதிலிந் நிகழ்வால் யானே,
திருவிழாக் கொண்ட ஊரார்
மேதினி தனிலே மிக்க
விருப்பொடு மகிழ்தல் போல,
யாதொரு துயரும் இன்றி
எல்லையில் உவகை கொள்வேன்.
அன்னவர் என்னை நீங்கி
அகன்றிடின், பாலை மண்ணில்,
சின்னதோர் ஊரில், மக்கள்
சீந்திடா, அணில்கள் ஆடும்
முன்றிலை உடைய வீட்டை
ஒத்திடும் நிலையில் உள்ளேன்;
பன்னரும் என்றன் இன்னல்
பகர்ந்திட அறியேன், தோழி!
விளக்கவுரை:
ஆள் இல்லாத வீட்டின் முற்றத்தில் அணில் தாராளமாக
ஊர்ந்தும், குறுக்கும் நெடுக்கும் ஓடியும் குதித்தும் விளை
யாடுவதைக் கவனித்த புலவர் அதனை உவமையாகக்
கையாள்கின்றார். எனவே, அவர் இயற் பெயர் தெரியாத
நிலையில், அவர் கையாண்ட சொற்றொடரால் அவர் குறிப்
பிடப் படுகிறார். பாடலில் தலைவி தோழியிடம் சொல்வதாவது:
என் காதலர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது, நான் பெரிதும்
உவந்து மகிழ்வேன். அது எப்படியிருக்கும் என்றால், திரு
விழாவை மகிழ்வோடு கொண்டாடும் ஊர்மக்கள் மனநிலை
யை ஒத்திருக்கும். என் காதலர் பொருள் நிமித்தமாகவோ, போர்
காரணமாகவோ, வேறு எதனையும் முன்னிட்டோ என்னைப் பிரிந்து
சென்றால், உடனேயே நான், பாலை நிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில்
மக்கள் வாழாத, அணில் மட்டுமே குறுக்கும் நெடுக்கும் ஆடும், முற்றத்
தையுடைய வீட்டைப் போலத் தனிமையில் உழல்வேன். இவ்வாறு,
பருவ வயதில் உள்ள பெண்களின் மனநிலையைத் தெளிவாக இயம்பிய
புலவரின் புலமை மெச்சுதற்குரியது.
No comments:
Post a Comment