அகமா? புறமா? எது சிறந்தது?
அகமும் புறமும் தமிழ்ப்பண்பை
அழகாய் இயம்பும் கூறுகளாம்;
நகமும் தசையும் போல்,ஆண்,பெண்
நடத்தும் வாழ்க்கை அகமாகும்;
வெகுண்டு பகைவர் தமையெதிர்த்து
வீர மாகப் பொருதல்,புறம்;
தகைமை சான்ற இப்பகுப்பே
தமிழர் புகழும் இலக்கியமாம்.
வையம் முழுதும் வீரத்தை
வணங்கிப் புகழ்ந்த காலமது;
நையும் மேனி துவண்டாலும்
நமனே எதிர்த்துப் பொருதாலும்
செய்யும் போரில் பின்வாங்கார்;
செத்தால் நடுகல் நிறுவி,மக்கள்
தெய்வம் போலத் தொழுதிடுவர்;
சிறிதும் தயக்கம் காட்டாரே.
"போரில் வீர மரணமுற்றார்,
புகுவர் துறக்கம், நிச்சயமாய்;"
பாரில் மக்கள் இவ்வாறு
பறைதல் வழக்கம்; ஆதலினால்
நேரில் யானை பிளிறிடினும்
நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்திட்டார்;
ஊரில் மக்கள் புகழ்வரென
ஒப்பில் வீரம் காட்டினரே.
சண்டை தனிலே, போர்செய்யும்
சமயம் மார்பில் புண்,காயம்
உண்டா கும்;போர்க் காயத்தை
உயர்வாய் மதிப்பர், பொதுமக்கள்;
அண்டும் பகைவர் தமைக்கண்டே
அஞ்சி யோடிப் புறங்கொடுக்கின்
மண்டும் வார்த்தை யாற்சுடுவர்;
மானம் காற்றில் பறந்திடுமே.
வீரம் என்னும் போதையினால்
விளைந்த சேதம் ஏராளம்;
தாரம் பல்லோர் கணவர்களைச்
சமரில் இழந்து விதவையெனும்
பேரைப் பெற்றுச் சீரழிந்தார்;
பிள்ளை, தமையன், பெற்றவனைப்
போரில் இழந்து பெண்டிர்பலர்
புலம்பி யழுது புரண்டனரே.
உலகம் முழுதும் இதேநிலைதான்;
உரம்சேர் வீரக் களிவெறியால்
பலதே சத்தின் மாந்தர்களும்
பகைத்துப் போரில் அழிந்தனரே;
அலகில் அழிவைத் தடுத்திடத்தான்
அறிஞர் காதல் உணர்வுகளைத்
தலைமைப் பண்பாய் முன்மொழிந்தார்;
சற்றே வீரம் சரிந்ததுவே.
இனிய தமிழில் புறப்பொருளை
இரண்டே நூல்கள் எடுத்தியம்பும்;
கனிபோற் புறநா னூறு, மற்றும்
கவரும் பதிற்றுப் பத்துமவை.
நனிஇன் பத்தை நல்குகின்ற
நற்றி ணைபோல் பலநூல்கள்
தனித்த சுவைசேர் அகப்பொருளைச்
சாற்றும் வகையில் தோன்றினவே.
காதல் வீரம் இவையிரண்டில்
காதல் சற்றே உயர்வுடைத்தாம்;
மோதல் , சண்டை, தவிர்த்திடலாம்;
மூளும் போரை விலக்கிடலாம்;
தீதில் அன்பைப் பரப்பிடுவீர்;
தேவை யிலாத போர்,தவிர்ப்பீர்;
ஆத லாலே காதலினால்
அனைவர் மனத்தைக் கவர்வீரே.
தேவை யின்றி வீரத்தைச்
சிறிதும் காட்ட எண்ணாதீர்;
சாவை நல்கும் போரினைத்தான்
தவிர்க்க வேண்டின் மாந்தரெலாம்
பூவை யொடுவாழ் இல்லறத்தைப்
பொலிவாய் நடத்தி உய்ந்திடுதல்
தீர்வை யளிக்கும்; அகவாழ்வைச்
சிறக்க வாழ்வீர் புவியோரே!
நமது நாட்டைக் காப்பதற்கு
நயஞ்சேர் வீரம் அவசியம்தான்;
அமைதி குலைந்து போர்மூண்டால்
அழிவும் இழப்பும் ஏராளம்;
சமுகம் மக்கள் தொகையிழப்பால்
சந்திக் கின்ற சிக்கல்பல;
கமழும் காதல் அகவாழ்வால்
காணும் நன்மை பலப்பலவே.
மனைவி யொடுவாழ் அகவாழ்வால்
மக்கள் தொகையைப் பெருக்கிடலாம்;
நினைக்கும் அமைதி நிலவிடுமே;
நேர்மை யில்லாப் பிறநாட்டார்,
தினையின் அளவும் நம்நிலத்தைத்
திருட்டுத் தனமாய் அபகரிக்க
வினைகள் செய்தால், மும்மடங்கு
வீரம் காட்டி முறியடிப்போம்.
அருஞ்சொற் பொருள்:
பொருதல்--போர்புரிதல்; நமன்---யமன்;
துறக்கம்--சொர்க்கம்; அண்டும்--நெருங்கும்;
புறங்கொடுக்கின்--புறமுதுகு காட்டினால்
சமர்--போர்; பூவை--பெண்டிர்
தகைமை--மேன்மை;
அகமும் புறமும் தமிழ்ப்பண்பை
அழகாய் இயம்பும் கூறுகளாம்;
நகமும் தசையும் போல்,ஆண்,பெண்
நடத்தும் வாழ்க்கை அகமாகும்;
வெகுண்டு பகைவர் தமையெதிர்த்து
வீர மாகப் பொருதல்,புறம்;
தகைமை சான்ற இப்பகுப்பே
தமிழர் புகழும் இலக்கியமாம்.
வையம் முழுதும் வீரத்தை
வணங்கிப் புகழ்ந்த காலமது;
நையும் மேனி துவண்டாலும்
நமனே எதிர்த்துப் பொருதாலும்
செய்யும் போரில் பின்வாங்கார்;
செத்தால் நடுகல் நிறுவி,மக்கள்
தெய்வம் போலத் தொழுதிடுவர்;
சிறிதும் தயக்கம் காட்டாரே.
"போரில் வீர மரணமுற்றார்,
புகுவர் துறக்கம், நிச்சயமாய்;"
பாரில் மக்கள் இவ்வாறு
பறைதல் வழக்கம்; ஆதலினால்
நேரில் யானை பிளிறிடினும்
நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்திட்டார்;
ஊரில் மக்கள் புகழ்வரென
ஒப்பில் வீரம் காட்டினரே.
சண்டை தனிலே, போர்செய்யும்
சமயம் மார்பில் புண்,காயம்
உண்டா கும்;போர்க் காயத்தை
உயர்வாய் மதிப்பர், பொதுமக்கள்;
அண்டும் பகைவர் தமைக்கண்டே
அஞ்சி யோடிப் புறங்கொடுக்கின்
மண்டும் வார்த்தை யாற்சுடுவர்;
மானம் காற்றில் பறந்திடுமே.
வீரம் என்னும் போதையினால்
விளைந்த சேதம் ஏராளம்;
தாரம் பல்லோர் கணவர்களைச்
சமரில் இழந்து விதவையெனும்
பேரைப் பெற்றுச் சீரழிந்தார்;
பிள்ளை, தமையன், பெற்றவனைப்
போரில் இழந்து பெண்டிர்பலர்
புலம்பி யழுது புரண்டனரே.
உலகம் முழுதும் இதேநிலைதான்;
உரம்சேர் வீரக் களிவெறியால்
பலதே சத்தின் மாந்தர்களும்
பகைத்துப் போரில் அழிந்தனரே;
அலகில் அழிவைத் தடுத்திடத்தான்
அறிஞர் காதல் உணர்வுகளைத்
தலைமைப் பண்பாய் முன்மொழிந்தார்;
சற்றே வீரம் சரிந்ததுவே.
இனிய தமிழில் புறப்பொருளை
இரண்டே நூல்கள் எடுத்தியம்பும்;
கனிபோற் புறநா னூறு, மற்றும்
கவரும் பதிற்றுப் பத்துமவை.
நனிஇன் பத்தை நல்குகின்ற
நற்றி ணைபோல் பலநூல்கள்
தனித்த சுவைசேர் அகப்பொருளைச்
சாற்றும் வகையில் தோன்றினவே.
காதல் வீரம் இவையிரண்டில்
காதல் சற்றே உயர்வுடைத்தாம்;
மோதல் , சண்டை, தவிர்த்திடலாம்;
மூளும் போரை விலக்கிடலாம்;
தீதில் அன்பைப் பரப்பிடுவீர்;
தேவை யிலாத போர்,தவிர்ப்பீர்;
ஆத லாலே காதலினால்
அனைவர் மனத்தைக் கவர்வீரே.
தேவை யின்றி வீரத்தைச்
சிறிதும் காட்ட எண்ணாதீர்;
சாவை நல்கும் போரினைத்தான்
தவிர்க்க வேண்டின் மாந்தரெலாம்
பூவை யொடுவாழ் இல்லறத்தைப்
பொலிவாய் நடத்தி உய்ந்திடுதல்
தீர்வை யளிக்கும்; அகவாழ்வைச்
சிறக்க வாழ்வீர் புவியோரே!
நமது நாட்டைக் காப்பதற்கு
நயஞ்சேர் வீரம் அவசியம்தான்;
அமைதி குலைந்து போர்மூண்டால்
அழிவும் இழப்பும் ஏராளம்;
சமுகம் மக்கள் தொகையிழப்பால்
சந்திக் கின்ற சிக்கல்பல;
கமழும் காதல் அகவாழ்வால்
காணும் நன்மை பலப்பலவே.
மனைவி யொடுவாழ் அகவாழ்வால்
மக்கள் தொகையைப் பெருக்கிடலாம்;
நினைக்கும் அமைதி நிலவிடுமே;
நேர்மை யில்லாப் பிறநாட்டார்,
தினையின் அளவும் நம்நிலத்தைத்
திருட்டுத் தனமாய் அபகரிக்க
வினைகள் செய்தால், மும்மடங்கு
வீரம் காட்டி முறியடிப்போம்.
அருஞ்சொற் பொருள்:
பொருதல்--போர்புரிதல்; நமன்---யமன்;
துறக்கம்--சொர்க்கம்; அண்டும்--நெருங்கும்;
புறங்கொடுக்கின்--புறமுதுகு காட்டினால்
சமர்--போர்; பூவை--பெண்டிர்
தகைமை--மேன்மை;
.
ReplyDelete