Monday 30 July 2018

வறுமையிற் செம்மை பேணிய சங்க காலப் புலவர்கள்

சங்க  நூல்கள் முதல்  இற்றை
நாள் நூல்கள் வரை படிக்கும்
பொழுது, இவற்றை இயற்றிய
புலவர்கள் பெரும்பாலும் வறு
மையில் உழன்றவர்கள் தாம்
என அறிகிறோம். அவர்களின்
ஏழ்மை நிலையைக் கருத்தில்
கொண்டு அவர்கள் பணத்துக்
காக அலைபவர்கள் என்றும்
உயர்ந்த குறிக்கோள் இல்லாத
வர் என்றும்  சிலர் தவறாகக்
கருதிவிடுகின்றனர்.

சங்க காலப் புலவர்களைப்
பொருத்தவரை, இக்கருத்து
முற்றிலும் தவறானதாகும்.
பெருந்தலைச் சாத்தனார்
குமணனைப்  பாடிய பாட்டில்
"ஆடுநனி மறந்த கோடுயர்
     அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி
      உழவாப்
பாஅல் இன்மையின் தோலொ
      டு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா
      வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்
       தம்மகத்துவம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ்
       மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி
        நினைஇ
நிற்படிந் திசினே நற்போர்க்
குமண!(புறம்:164) என்றார்.
பொருள்:
சமையல் என்பதையே மறந்த
புடை  ஓங்கிய அடுப்பில் காளா
ன் பூத்துவிட்டது. பால் இல்லா
மையால் தாயிடம் கிடைக்கும்
என்று எண்ணிச் சுவைக்கின்ற
பிள்ளை பால் கிட்டாததால்
அழும். இதனைப் பார்த்த என்
மனைவி கண்ணீர் வடிக்கின்
றாள். இத்துயரம் துடைத்திட
உன்னை நாடி வந்தேன்" என்று
குமணனிடம் கூறுகின்றார்.
இந்தச் சூழ்நிலைதான் எல்லாப் புலவர் குடும்பங்களி
லும் நிலவியது. இத்தகைய
வறுமையில் உழன்ற போதும்
எப்படி செம்மையாக வாழ்ந்த
னர்? என்பதைப் பார்ப்போம்.

மயிலுக்குப் போர்வை ஈந்தவ
ரும் கடையெழு வள்ளல்களில்
ஒருவரும் ஆகிய வையாவிக்
கோப்பெரும் பேகன் என்பார்
தம் மனைவியாகிய கண்ணகி
(சிலப்பதிகாரக் கண்ணகி
அல்லள்.)யை மறந்து வேறு
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
வந்தார். இதையறிந்த அப்
பெண் பெருந்துயரத்தில்
மூழ்கினள். இதனைக் கேள்வி
யுற்ற கபிலர், பரணர் என்ற
புலவர்பெருமக்கள் பேகனிடம்
வேண்டுகோள் விடுத்தனர்.
உடனடியாக அவர்தம்  மனை
வியின் பிரிவுத் துயரைப்
போக்குமாறு கோரினர்.(புறம்:
143 மற்றும் 144)

"எமக்குப்  பரிசில்  வேண்டா;
நின் மனைவியின் பிரிவுத்
துயரைத் தீர்ப்பாயாக; அதுவே
நாம் வேண்டும் ஒரே பரிசில்"
என்று மீண்டும் கபிலர் பாடி
னார்..(புறம்:145). அரிசில்கிழா
ர் என்னும் புலவர்"நின் தேவி
யின் துயர் தீர்ப்பாய்; அதுவே
யாம் வேண்டும் ஒரே பரிசில்"
எனச் செப்பினார்.(புறம்:146).
பெருங்குன்றூர்க்கிழார் என்
பவரும்"நின் மனைவியின்
துயர்துடைப்பாய்;அதுவே எம்
பரிசில்; பிற யாதும் யாம் வேண்டோம்" என்று கூறினார்
.(புறம்.147).

சங்க காலத்தில் கொண்கா
னம், துளு நாடு முதலிய பகுதி
களை ஆண்ட வேளிர்குலச்
சிற்றரசன் நன்னன் என்பவன்
தன் நாட்டுப் பெண்ஒருத்திக்கு
அவள் செய்யாத குற்றத்திற்கு
மரண தண்டனை அளித்தான்.
அதனால் அவனைப் புலவர்
யாருமே பாடினார் அல்லர்.
பெண் கொலை புரிந்த நன்ன
ன் என்று தூற்றினர்.

சோழர் குலத்திற் பிறந்த நலங்
கிள்ளி என்பவரும், நெடுங்
கிள்ளி என்பவரும் போர்புரிந்
திட முனைந்த போது புலவர்
கோவூர்கிழார் தலையிட்டுச்
சமாதானம் செய்து போரைத்
தடுத்துநிறுத்தினார்.(புறம்:45).

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்
ளிவளவன் என்னும் சோழ
வேந்தன் மலையமான் என்
னும் குறுநில மன்னனின்
புதல்வராகிய சிறுவர்களை
யானைக் காலால் இடறிக்
கொல்லுமாறு பணியாளர்
களை ஏவியபோது இதனைத்
தடுத்து நிறுத்தியவர் புலவர்
கோவூர்கிழார்(புறம்:46). இது
போலவே, சோழன் காரியாற்
றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
புலவர் இளந்தத்தனை ஒற்றன்
எனக் கருதிக் கொல்ல முயன்
ற போது புலவர் கோவூர்கிழார்
தான் காப்பாற்றினார்.(புறம்:
47).

பெருந்தலைச்சாத்தனார்
என்னும் புலவர் குமணனிடம்
பரிசில் கேட்டுச்  சென்றபோது
தன் உடைவாளைப் புலவரிடம்
தந்து தனது தலையை அரிந்து
நாட்டில் வாழும் தன் தம்பியி
டம் கொடுத்துப் பரிசில் பெற்று
க்கொள்ளுமாறு குமணன்
கூற அதிர்ந்துபோன புலவர்
சிறு நாடகம் நிகழ்த்தி அண்ண
ன் தம்பியை இணைந்து
வாழச்செயதார்.(புறம்:165).

பிசிராந்தையார் என்னும்
புலவர் நேரில் பார்த்திராத
கோப்பெருஞ் சோழன் என்னு
ம் மன்னனுடன் நட்பு பாராட்டி
அவர் வடக்கிருந்த பொழுது
தாமும் அவருடன் வடக்கிருந்து
உயிர்நீத்தார். பொத்தியார்
என்னும் புலவரும் பிற்பாடு
கோப்பெருஞ் சோழன் நினை
வாக வடக்கிருந்து உயிர்துறந்
தார்.(புறம்:215, 216 மற்றும்222).

புல்லாற்றூர் எயிற்றியனார்
என்னும் புலவர் கோப்பெருஞ்
சோழன் தம் புதல்வரொடு
போர்புரிய ஆயத்தம் செய்த
பொழுது நல்லுரை நவின்று
போரைத் தடுத்து நிறுத்தினார்.
(புறம்:213).

ஒளவைப்  பிராட்டியார் மன்ன
ன் அதியமானொடு சிறந்த
நட்புப் பாராட்டியவர். ஒருசமய
ம் பரிசில் கொடுக்கத் தாமதம்
ஆனபோது" எத்திசைச் செலி
னும் அத்திசைச் சோறே" என்று வாயிற்காவலனிடம்
கூறி மன்னனிடம் தெரிவிக்
கச் சொன்னார். (புறம்:206).

வெளிமான் என்ற குறுநில
மன்னனைப் பாடிப் பரிசில்
பெற எண்ணிய பெருஞ்சித்
திரனார் என்ற புலவர், மன்னன் நாட்டுக்குச் சென்ற
போது அவர் இறக்கும் தறுவா
யில் இருந்ததால் தன் தம்பி
இளவெளிமானைக் கைகாட்டி அவனிடம் பரிசில்
பெற்றுக்கொள்ளுமாறு
தெரிவித்தார். இளவெளிமான்
மிகச் சொற்பமான பரிசில் நல்க, அதை வேண்டாவென
மறுத்துக் குமணனிடம் சென்று
பாடி யானையைப்  பரிசிலாகப்
பெற்று அதனை இளவெளிமா
னது  காவல் மரத்தில் கட்டினார்.(புறம்:162).

வள்ளல் பாரி மறைந்த பின்ன
ர் அவர்தம் பெண்மக்கள் இரு
வரையும் திருமணம் செய்து
கொடுக்கப்  புலவர் கபிலர் மிக
வும் முயற்சி மேற்கொண்டார்.
அவர் முயற்சி தோற்றுவிட்ட
தால் மனம் வருந்தி அப்பெண்
களைப் பார்ப்பனரிடம் பாது
காப்பாக ஒப்படைத்துவிட்டு
வடக்கிருந்து உயிர்துறந்தார்.
பாரியிடம் பூண்ட நெருங்கிய
நட்பு காரணமாக அவர்பெண்க
ளைத் தம் பெண்களாகக் கருதி மனம் நொந்து உயிர்
நீத்தார்.

ஔவையார் பிற்பாடு அம்மக
ளிருக்கு மணம் செய்து வைத்ததாகத் தனிப்பாடல்கள்
இயம்புகின்றன. ஔவையார்
தமிழகம் முழுவதும் சுற்றிவந்
து ஆங்காங்கு ஏறபட்ட சிறுசிறு
பிணக்குகளைக் களைந்தார்.
அரசர்முதல் ஆண்டி வரை
அனைவரிடமும் அன்பு பாராட்
டிய அவர் சமூகத்தில் நல்ல
செல்வாக்கோடு திகழ்ந்தார்.

புலவர்கள் பெற்ற பரிசில்க
ளை என்ன செய்தனர்? புலவர் பெருஞ்சித்திரனார் புறம் 163
ஆம் பாடலில் தம் மனைவியி
டம் கூறியதைப் பார்ப்போம்:
"நின்நயந்து உறைநர்க்கும்,
    நீநயந்து உறைநரக்கும்
பன்மாண் கற்பின்நின்
    கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர
    யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை
    நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது
    என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும்
    என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி
    மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக்
    கிழவன்
திருந்துவேல் குமணன்
    நல்கிய வளனே!
பொருள்:
" நின்னை விரும்புவோர்,
நின்னால் விரும்பப்படுவோர்,
நின் உறவினராகிய மூத்த
மகளிர், கடன் கொடுத்து
உதவியோர் என எல்லோர்க்
கும் கொடுப்பாயாக! இன்னின்
னார்க்கு என்றோ என்னைக்
கலந்து ஆலோசிக்கவேண்டும்
என்றோ நினையாது கொடுப்பாய். நாமே இதைக்
கொண்டு பயன்அடைவோம்
என்று எண்ணாமல் எல்லோருக்கும் கொடுப்பாய்.
முதிரைமலை நாட்டுத் தலை
வன் குமணன் கொடுத்த
செல்வம் இஃதாகும்".

இதுகாறும் பார்த்த வரையில்,
சங்க காலப் புலவர்கள் வறுமையிலும் செம்மை காத்
தனர் என்பது விளங்கும்.
.











Thursday 19 July 2018

ஊனத்தை வெல்வோம் உணர்ந்து.

அன்றொரு  நாள்பே ருந்தில்
   அவசரப்  பணிநி மித்தம்
சென்றுகொண்  டிருந்த போது
   தேவதை  போலோர்  நங்கை
பின்புற  இருக்கை  தன்னில்
   பேரழ  கோ(டு)இ  ருந்தாள்;
நின்றதவ்  வூர்தி;  அன்னாள்
நிறுத்தத்தில் இறங்க லானாள்

கையினில் கவைக்கோல்
    தாங்கிக்
   கால்தடு மாற  நின்றாள்;
மெய்யினில் ஒருகால் இல்லை
  வெறும்ஒற்றைக் காலை
    வைத்துப்
பையவே  விந்தி  விந்திப்
   பக்குவ மாய்ந  டந்தாள்;
ஐயகோ இதனைக் கண்ணுற்
 றடியனேன் நொந்துபோனேன்

பின்னர்நான் இறங்கிவிட்டேன்
  பேரன்மார் கேட்ட பண்டம்
இந்நகர்  தனிலே  எங்கே
  இருக்கின்ற தென்று தேடிப்
பன்னரும்  எழிலார் பையன்
பண்டம்விற்றிடநான்கண்டேன்
அன்னவன் தனைநெ ருங்கி
   ஆவலாய்ப் பேச லானேன்.

நல்லதோர் பேச்சால் நாங்கள்
   நனிஇன்பம் பெற்றோம்;
    பின்னர்
மெல்லவே  கிளம்ப  எண்ணி
   விடைகொடு பிள்ளாய்
   என்றேன்;
சொல்லவே  இயல  வில்லை;
சுடர்க்கண்ணில் பார்வை
இல்லை;
வல்லமை மிக்க தெய்வம்
வஞ்சித்து விட்ட தாமோ?.

செல்கின்ற  வழியில் எற்குத்
தெரிந்தவோர் சிறுவன்நின்று
பல்வித விளையாட்டெல்லாம்
 பயின்றிடும் சிறாரைப்
 பார்த்து
மல்கிடும் கண்ணீர் காட்டி
 மௌனமாய் நிற்க லானான்;
தொல்லையாம் செவிட்டுத்
 தன்மை
துயர்சொய்யும்; மறந்தே
 போனேன்.

மேதினி தனிலே நம்மை
  மேன்மையாய் இறைவன்
  செய்தான்;
வேதனை  சிலரே கொள்வர்,
 மேனியில் குறைபா டுள்ளோர்
ஆதலின்  அவர்கள் இஃதை
  அகத்தினில் கொண்டி டாமல்
சாதனை புரிந்து பாரில்
  தக்கவர் போற்ற வாழ்க!

ஒருத்திக்கோ ஒருகால்
  இல்லை;
  உள்ளத்தில் ஊனம் இல்லை
கருத்தினில் சிறந்த காளை
 கண்களில் பார்வை இல்லை
இருசெவி கேளாப் பிள்ளை
  இருக்கின்றான் மனத்தைத்
  தேற்றி;
திருத்தமாய் எல்லாம்
  கொண்டார்
சிந்தையில்  துயரம் ஏனோ?

செவிப்புலன் சிறிதும்
  கேளார்,
 செய்கைக்குக் கைகள்
  இல்லார்,
புவிமிசை கண்கள் இல்லார்,
 புகன்றிடப் பேச்சு இல்லார்,
தவித்திடும் கால்கள் இல்லார்,
 சாதிக்கும் போது நம்மில்
எவ்விதக் குறையும் இல்லார்
 ஏன்மிக  வருந்தல் வேண்டும்?


பின்  குறிப்பு:

மதுரைக்  கல்லூரி, மதுரை
நடத்திவரும்  பழைய மாண
வர்  சங்கத்தின் உறுப்பினர்
என்ற முறையில் எனக்கு
வந்த ஆங்கிலக் கவிதை(
இயற்றியவர் பெயர் தெரிய
வில்லை) யின் கருத்தை உள்
வாங்கிக் கொண்டு தமிழில்
புனையப்பட்ட கவிதை. முழு
மொழிபெயர்ப்பு  அன்று. அச்
சங்கத்துக்கு மிக்க நன்றி
உரித்தாகுக.











Thursday 12 July 2018

சங்ககாலத்தில் கொடுங்கோல் ஆட்சிசெய்த நன்னன்

குடநாட்டின்  வடக்கில்  உள்ள
கொண்கான  நாட்டில்  வேளிர்
மரபில்  வந்த நன்னனென்னும்
மன்னன் சேர வேந்தன் ஆட்சி
யின் கீழ்ச்சிற்றரசனாக  ஆட்சி நடத்தி வந்தான்.  அவன் கல்வி
கேள்விகளில் வல்லவன்
அல்லன். அதனால்  புலவர்
முதலான கற்றவர்களை ஆதரித்தான் அல்லன். நெஞ்
சில் சிறிதும் இரக்கமற்றவன்.
கொண்கானநாட்டின்வடக்கில்துளு நாடும்  கிழக்கே புன்னா
டும் இருந்தன. புன்னாட்டைக்
கங்கர்  ஆண்டுவந்தனர். இப்
போதுள்ள  மைசூர்நாட்டைப்
பண்டைய நாளில்  கங்கநாடு
என அழைத்தனர்.

நன்னன்  தனது நாட்டின் கடி
மரமாக(காவல் மரமாக) மா
மரம்  ஒன்றை நட்டுப்  பாது
காத்து வந்தான். அரசு மரம்
என்பதால்  பொதுமக்கள் எவ
ரும் அதை நெருங்குவதே
யில்லை.  அந்த மாமரம் ஒரு
ஆற்றையொட்டி யமைந்திரு
ந்தது.

ஒருநாள் ஒரு பெண் ஆற்றில்
குளித்துக்  கொண்டிருந்த
பொழுது  அந்த மாமரத்தில்
இருந்து  ஒரு காய் ஆற்றில்
விழ, ஆற்றுநீர்  அதையடித்
துக்கொண்டு அப்பெண்ணரு
கில் வர, அவள் அதனைக்
கையில் எடுத்து உண்டுவிட்
டாள்.

இதனைக்  காவலர் மூலம்
கேள்விப்பட்ட  இரக்கமற்ற
மன்னன் பெண்ணுக்கு மரண
தண்டனை விதித்தான். அப்
பெண் கோசர்  குலத்தைச்
சேர்ந்தவள். கோசர் குலத்தைச்
சேர்ந்தவர்கள் மாவீரர்கள்.
நன்னன் படையிலும் நாட்டைப்
பாதுகாக்கும் பணியிலும்
பணிபுரிந்துவந்தனர். தண்ட
னை விதிக்கப்பட்ட பெண் ஒரு
நிலப்பகுதித் தலைவனுக்கு
மகள். இக்கொடிய செய்தியை
அறிந்த அத்தலைவன் நன்ன
னிடம்  வந்து குற்றத்தை மன்
னிக்குமாறு வேண்டினார்.
தண்டமாக அப்பெண்ணின்
எடைக்கு எடை பொன்னையும்
81 யானைகளையும் கொடுப்ப
தாக மன்றாடிக்கேட்டுக்கொண்
டார்.  ஈவிரக்கம் இல்லாத,பிடி
வாத குணமிக்க நன்னன்
என்ற கொடுங்கோலன் அதை
ஏற்றான்அல்லன்.  கொலைத்
தண்டனையை நிறைவேற்றி
னான். இந்தச் செய்தியைக்
கேட்டுப்  பொதுமக்கள் குமுறி
னர்.  புலவர்கள் கொதித்தனர்.
பெண்கொலை புரிந்த நன்னன் என்று தூற்றினர்.

பரணர் என்ற புலவர் தாம்
இயற்றிய ஒரு  பாடலில்(குறுந்
தொகை--292) கீழ்க்கண்டவாறு
தெரிவிக்கின்றார்:-
"மண்ணிய சென்ற ஒண்ணு
      தல் அரிவை
புனல்தரு பசுங்காய்  தின்ற
      தன் தப்பற்(கு)
ஒன்பதிற்(று) ஒன்பது களிற்
      றொ(டு)அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்
      பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த
      நன்னன்"
எனச் சாடுகின்றார்.

அப்பெண் தெரிந்து வேண்டு
மென்றே  அக்காயை உண்
டாள் அல்லள்.  ஆற்றில்அடித்து
வரப்பட்டது. அதை உண்டதற்கு
மிகமிக கொடிய தண்டனை
யான  மரணதண்டனை என்ப
து ஏற்றுக்கொள்ளவே முடியா
தது.  மனம் ஆறவே ஆறாது.
எனவே, புலவர்கள் எவருமே
பெண் கொலை புரிந்த நன்ன
னைப்  போற்றிப் பாடவில்லை


பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இளங்கண்டீரக்
கோவும் இளவிச்சிக்கோவும்
ஒன்றாக உரையாடிக்கொண்
டிருந்த  பொழுது இளங்கண்டீ
ரக்கோவைத் தழுவி நலம் கேட்
டு மற்றவரை(இள விச்சிக்கோ
வை) எதுவும் நலம் கேட்காமல்
இருந்தார். இளவிச்சிக்கோ
அரச குடும்பத்தைச் சேர்ந்த
தன்னை நலம்கேட்காததற்கு
காரணம் என்ன? என்று வின
விய போது  நன்னனின் மரு
கன்  என்பது தான் காரணம்
என்று பதிலிறுத்தார். (புறநா
னூறு  பாடல் எண்:151)


தம்குலப்  பெண்ணைக் கொன்
ற காரணத்தால் கோசர்கள்
நன்னனைப்  பழிக்குப்பழி
வாங்க  எண்ணினர். சூழ்ச்சி
செய்து  நன்னனின் காவல்
மரமான  மாமரத்தை வெட்டி
அகற்றினர். இந்த தகவலை
புலவர் பரணர் தமது பாடலில்
தெரிவிக்கின்றார்(குறுந்தொ
கை :பாடல் எண்:73). பாடல்
பின்வருமாறு:
"மகிழ்நன் மார்பே வெய்யை
     யானீ
அழியல்  வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற்
     போக்கிய
ஒன்று  மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டு
     மாற் சிறிதே!".

கொடுங்கோல்  நன்னன் கொண்கான  நாட்டில் உள்ள
ஏழில் மலைப்  பகுதியை
ஆண்டுவந்தான்.  அதன் வட
பகுதியான துளு நாடும்  அவனுக்கு  உரியதே.  துளு
நாட்டில் கோசர் எனப்படும்
குடியினர் வாழ்ந்துவந்தனர்.
" மெய்ம்மலி பெரும்பூண்
        செம்மற் கோசர்
தோகைக்காவின் துளுநாடு"
என்று புலவர் பாடியுள்ளனர்.
துளு நாட்டிலும்  அரபிக்கடற்
கரையைச் சார்ந்த நெய்தற்
பகுதியில்  வாழ்ந்தனர்.
"பல்வேற்  கோசர் இளங்கள்
     கமழும்
நெய்தலஞ்  செறுவின் வளங்
     கெழு நன்னாடு"
என்று கல்லாடனார் பாடியுள்
ளார்."
இப்படியாக, கொடுங்கோல்
நன்னன் கோசர்களின் பகை
யைப்  பெற நேர்ந்ததனால்
சேரவேந்தனின் வலிமை
கூடிவிட்டது.  எந்த நேரமும்
நன்னன்  நாட்டைத்  தாக்கி
நிரந்தரமாக  அடிமைப் படுத்த
லாம்  என்ற  பேச்சைக் கேள்வி
யுற்ற நன்னன் புன்றுறை
நாட்டுக்கு  ஓடிவிட்டான். கடி
மரமாக  மாமரத்தை விலக்கி
வாகைமரத்தை அறிவித்தான்
.விசயமங்கலத்துக்கும் பெருந்
துறைக்கும் இடையே வாகைப்
புத்தூர் என்ற ஊர் இந்தக்
காரணத்தால்  உருவானதாக
இடைக்காலக்  கல்வெட்டொன்
று  தெரிவிக்கிறது. பெண்
கொலை  செய்யப்பட்ட  இடத்
தைப்  பெண்கொன்றான்
பாறை என அழைக்கின்றனர்.
மலையாளத்தார் பெங்கணாம்
பறா  என  அழைக்கின்றனர்.


வீரமிக்க  கோசர்கள் பகையை
அடைந்ததால்  நன்னனின்
படைபலம் குறைந்துபோயிற்று
பின்னாளில்  களங்காய்க்
கண்ணி நார்முடிச் சேரல் என்ற
சேரவேந்தர் நன்னன் நாட்டின்
மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தார்.

தன்னுடைய  பிடிவாதத்தாலும்
கொடிய  எண்ணங்களாலும்
கொடுங்கோல்ஆட்சியினாலும்
பெண்கொலை புரிந்தநன்னன்
அழிவடைந்தான்.

இந்த இடத்தில்  இதேபோல
நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை
ஒப்பிட்டுப்  பார்த்தல்வேண்டும்
சேரன் தகடூர் எறிந்த பெருஞ்
சேரல் இரும்பொறையின் முரசு கட்டிலில்  அவரைப் பார்க்
க வந்த மோசிகீரனார் என்ற
புலவர் நடந்துவந்த களைப்பில்
அயர்ந்து உறங்கிவிட்டார்.
துயில் நீங்கி விழித்தெழுந்த
புலவர் சேரவேந்தர் தமக்கு
கவரி வீசிக்கொண்டிருப்பதை
அறிந்து பதறித்துடித்துவிட்டார்
அரசருடைய முரசுகட்டிலில்
தூங்கிய தமக்குத் தண்டனை
தராமல்  கவரி வீசியதுகுறித்து
வியந்து  பாடியுள்ளார். (புறநா
னூறு:எண்:50) அது பின்வரு
மாறு:
"குருதி வேட்கை உருகெழு
       முரசம்
மண்ணி வாரா அளவை
        எண்ணெய்
நுரைமுகத் தன்ன மென்பூஞ்
        சேக்கை
அறியா தேறிய என்னைத்
        தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம்  சாலும் நற்றமிழ்
         முழுதறிதல்;
அதனொடும் அமையா  தணுக
          வந்துநின்
மதனுடை முழவுத்நோள்
          ஓச்சித் தண்ணென
வீசியோயே!"
இதுபோலவே  பெருந்தன்மை
யுடன் நன்னன் நடந்திருந்தால்
அழிவு  நேர்ந்திருக்காது. தமிழ்
இலக்கியம் உள்ளவரை நன்ன
னின் பெண்கொலைக்குற்றம்
நீங்காது நினைவில் நிற்கும்.
ஆய்வுக்குரிய  நூல்கள:
சேர மன்னர்கள் வரலாறு--
  எழுதியவர்:திரு ஒளவை சு.துரைசாமி பிள்ளை
 அவர்கள்.
புறநானூறு
குறுந்தொகை


.





.


.



Wednesday 4 July 2018

இல்வாழ்வா? துறவுவாழ்வா?

 இல்வாழ்வா?  துறவுவாழ்வா? எது  நல்லது?

1)சாதலே  வந்த  போதும்
        தரணியே  எதிர்த்து  நின்று
    மோதலே  செய்த  போதும்
        மூண்டெழு  சீற்றம்  பொங்க
    வேதனை  தந்த  போதும்
       வேடிக்கை  புரிந்த  போதும்
    காதலைப்  பாடேன்;  ஆனால்
       கடவுளைப்  பாடு  வேனே!
   
2)மண்ணினைப்  பாடு  கின்றேன்;
மாக்கடல்  பாடு  கின்றேன்;
   விண்ணினைப்  பாடு  கின்றேன்;
        வெற்பினைப்  பாடு கின்றேன்;
   கண்ணினில்  தோன்றும்  நல்ல
காட்சிகள்  பாடு  கின்றேன்;
  பெண்ணினைப்  பாடல்  முற்றும்
பிழையென  எண்ணு  வேனே!

3)இப்படி  யெல்லாம்  பேசும்
        இறுகிய  மனத்தர்  ஓர்நாள்
    செப்பினில்  வடித்த  ஏரார்
சிலைநிகர்  பெண்ணைக் கண்டால்
    தப்படி  அடியேன்  சொன்ன(து)
அனைத்துமே  தப்பு; தப்பே;
   ஒப்புக்கொள்  கின்றேன்  குற்றம்;
    உன்னிடம்  காதல்  என்பார்.

4)அன்பெனும்  வலைக்குள்  ஆண்பெண்
            அகப்படல்  முற்றும்  இந்த
    மன்பதை  போற்றி  வந்த
             வழிவழி  மரபு  நேர்வு;
    மென்மைசேர்  பெண்ணைக்  கண்டு
             விழிகளில்  திகைப்பு  தேங்க
    வன்மைசேர்  ஈர்ப்பால்  ஆணே
             மகிழ்ந்திடல்  இயற்கை  தானே!

5)கயலொத்த  விழியி  ரண்டும்
காரொத்த  கூந்தல்  தானும்
   நயமிக்க  முத்துப்  பல்லும்
நாணத்தில்  செம்மை  காட்டும்
  வியத்தக்க  கன்னம்  மற்றும்
       வெண்ணிலா  முகமும்  இன்னும்
  செயலற்றுத்  திகைக்கச்  செய்யும்
பிறபிற  அழகும்  வாட்டும்.

 (  6  )ஆகவே  இயற்கை  நீதிக்(கு)
            அடங்கியே  வாழு  வீரே!
 நோகவே  உடல்வ  ருத்தும்
துறவிகள்  வாழ்க்கை  வேண்டா;
    தேகத்தின்  சுகத்தைப்  பேணத்
தெரிவைகை  பற்றல்  வேண்டும்;
    ஓகைகொள்  குடும்ப  வாழ்வை
ஒழுக்கமாய்  வாழ்வீர்  மாதோ!
(தெரிவை≠ பெண்;  ஓகை=உவகை--மகிழ்ச்சி)

7)மரபினை  மீறி  மக்கள்
       வாலிப  வயதில்  கன்னி
   கரத்தினைப்  பற்றி  டாமல்
காலத்தைக்  கழித்தல்  நன்றோ?
   வரமெனும்  குடும்ப  வாழ்வை
       மதிப்புடன்  நடத்தி  வந்தால்
  நிரந்தர  இன்பம்  கிட்டும்;
நிலைத்திடும்  அமைதி  தானே!

8)பற்றற்ற  வாழ்வு  தன்னால்
        பயனொன்றும்  இல்லை  பாரில்;
   சுற்றத்தார்  நண்பர்  சூழத்
        தூயநல்  லன்பு  பேணி
  எற்றைக்கும்  எல்லோ  ருக்கும்
இயன்றிடும்  உதவி  செய்து
  மற்றின்பம்  அடைவோம்;  மாந்தர்
வருத்தத்தைப்  போக்கு  வேமே!