சங்க நூல்கள் இயம்பும் ஆட்டன்அத்தி--ஆதிமந்தி காதல்.
ஆதிமந்தி சங்கப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர்
சோழவேந்தன் கரிகாற் பெருவளத்தான் மகளாவார். இவர்
இயற்றிய சங்கப் பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்
படுகிறது.(குறுந்தொகை பாடல் எண்: 31). நீச்சல் நடன விளை
யாட்டு வீரன் ஆட்டன்அத்தி அக்காலத்தில் இக்கலையில் வல்ல
வனாயிருந்தான். சேரநாட்டு அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்று
இவனைப்பற்றி இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார நூலில் குறிப்
பிட்டுள்ளார். ஆட்டனத்தி நல்ல தோற்றப் பொலிவு கொண்டவனாகவும்
விளங்கினான். வேந்தன் கரிகாற் பெருவளத்தான் முன்பு தன்
கலைத் திறமையைக் காட்டிப் பெயரும் புகழும் பெற விரும்பினான்.
அதற்காக, நீர்நிலைகளில் பயிற்சிமேற்கொண்டுவந்தான். அச்சமயம்
அவனைப் பார்த்த ஆதிமந்தி அவன்பால் காதல்கொண்டாள்.
ஆடிப் பெருக்கு என்றும் பதினெட்டாம் பெருக்கு என்றும் அக்காலத்தில்
சிறப்பாகப் பாராட்டப்பட்ட ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளில் ஆறுகளில்
புதுப்புனல் பொங்கிவரும். தென்மேற்குப் பருவக்காற்றின் விளைவாக
ஆறுகளின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் இந்தப் புதுப்புனல்
பொங்கிவரும். உழவர்கள் இந்நாளில் வயல்களில் விதைக்கத் தொடங்கி
விடுவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி யன்றோ? இப்பொழுது
விதைத்தால்தான் தைமாதம் அறுவடை செய்தல் இயலும். அந்நாளில் காவிரிக்
கரையோர ஊர்களில் வாழ்ந்த மக்கள் பதினெட்டாம் பெருக்கை வெகு சிறப்
பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆட்டனத்தி வேந்தன் கரிகாற் பெருவளத்தான் முன்னிலையில் கழார் என்னும்
காவிரியாற்றுத் துறையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்ட உரிய ஏற்பாடுகள் செய்யப்
பட்டிருந்தன.அவனோடு போட்டியிட்டவள் காவிரி என்னும் பெயர்கொண்ட நீச்சல்
மகள். இருவரிடையே நிகழ விருந்த போட்டிக்குக் கரிகாற் பெருவளத்தானே
நடுவராகப் பணிபுரிந்தார். .அகநானூறு பாடல் 376 போட்டி நிகழ்ச்சியை விவரிக்
கிறது. " ஒலிகதிர்க் கழனி கழாஅர் முன்துறை
கலிகொள் சுற்றமொடு கரிகால் காண
தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை
ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரள
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல்நயந் தாடும் அத்தி அணிநயந்து
காவிரி கொண்டு ஒளித்தாங்கு.........."
பொருள்:
நீச்சல் நடனம் என்பது நீருக்குள் தலைகீழாக மூழ்கிப் பாதங்களை வெளியே
தெரியும்படி அவைகளை அசைத்துக் காட்டுதல். வயிற்றில் கச்சு இறுக்கக் கட்டப்
பட்டிருக்கும். வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பொன்னால் ஆன மணிகள்
ஒலிக்கும் படி தன் உடலையே நீளவாக்கில் உருட்டிக் காட்டுதல் போன்ற சாகசங்
களைச் செய்தல் நீச்சல் நடனமாகும்.இவைகளை யெல்லாம் பிசகில்லாமல் முறைப்
படி ஆட்டனத்தியும் நீச்சல் மகளும்(அவள் பெயர் காவிரி) செய்தனர். கரிகாலன்
இக் காட்சியைக் கண்டு வியந்து கொண்டிருந்த வேளையில் புதுப்புனலின்
நீரோட்டம் வேகமெடுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளம் ஆட்டனத்தி
யையும் நீச்சல் மகளையும் உருட்டிப் புரட்டி அடித்துச் சென்றது. வெள்ளத்தின்
வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நீச்சல் மகள் நீரில் மூழ்கி மாண்டு போனாள்.
உண்மையில் நீச்சல்மகளுக்கு ஆட்டனத்திமேல் காதல் இருந்தது. தன் தாழிருங்
கூந்தலால் அவனை மறைத்து இழுத்துச் சென்று ஏதாவது கரையோரத்தில்
ஒதுங்கி அவனை மணம் செய்துகொள்ள எண்ணியிருந்தாள். அந்தோ! பரிதாபம்;
அவள் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. வெள்ளத்தின் வேகம் ஆட்டனத்தியை
வெகு தொலைவு அடித்துச் சென்று ஒரு சிற்றூரின் கரையோரத்தில் தள்ளிவிட்டுச்
சென்றுவிட்டது.
மயக்கத்தில் இருந்த ஆட்டனத்தி ஒரு வழியாகக் கண்விழித்துப் பார்த்தான். ஏதோ
முன்பின் பார்த்திராத ஊருக்கு வெள்ளத்தால் அடித்துவரப் பட்டதை அறிந்து கொண்
டான். உடம்பெல்லாம் வலி, வேதனை. பசித் துன்பம் வேறு வாட்டியது. நல்ல வேளை
யாக ஓரிளம் பெண் வந்தாள். அவனைக் கைத்தாங்கலாக ஒரு குடிசைக்குள் அழைத்துச்
சென்று உணவு பரிமாறினாள். தன் பெயர் மருதியெனத் தெரிவித்தாள். தன் தந்தை
ஒரு மீனவன் என்றும் வயது மூப்பினால் அவன் தவறிவிட்டதாகவும் தற்பொழுது தான்
மட்டுமே இப்பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தாள். காளையும் கன்னியும்
ஒருவர் பால் மற்றவர் ஈர்க்கப்பட, இருவர்க்கிடையே காதல் அரும்பித் துளிர்த்தது.
இருவரும் மணம் புரிந்துகொண்டு வாழத் தொடங்கினர்.
இதற்கிடையில், கழார் ஊரில் நீச்சல் நடனப் போட்டியைக் கண்டுகளித்த சோழவேந்தரும்
அவர்மகள் ஆதிமந்தியும் ஏனைய பொதுமக்களும். ஆட்டனத்தியும் நீச்சல் மகளும் வெள்
ளத் தால் அடித்துச்செல்லப் பட்டதைப் பார்த்துச் செய்வதறியாமல் கைபிசைந்து நின்றனர்.
ஆதிமந்தி மயங்கி விழுந்து விட்டாள். கரிகாலர் சில படைவீரர்களை ஆற்றோரமாகச்
சென்று பார்த்து வருமாறு அனுப்பிவைத்தார். ஒரு நாழிகைக்குப் பிறகு ஆதிமந்தி
மயக்கம் தெளிந்து எழுந்தாள்.
காதலனைக் காவிரியாற்று வெள்ளம் அடித்துச் சென்றதைக் கண்ட ஆதிமந்தி பித்துப்
பிடித்தவள் போலானாள். காவிரியாற்றங் கரையோரமாகவே தானும் சென்று தன்
காதலனைத் தேட முடிவு செய்தாள். மகளின் பேதுற்ற நிலையைக் கண்ட கரிகாலர்
மகளின் துணைக்கும் பாதுகாப்புக்கும் பல படைவீரர்களை மகளுடன் சென்று தேடு
மாறு பணித்தார். ஆதிமந்தியும் படைவீரர்களும் காவிரியாற்றங் கரையோரமாகவே
சென்று கண்ணில் தென்பட்டவர்களிடம் ஆட்டனத்தியைப் பற்றி விசாரித்தனர்.
இப்படியாக ஓரிரு நாட்கள் கழிந்தன. ஒருநாள் காவிரியாற்றங் கரையோரத்தில்
ஒரு சிற்றூரில் ஆட்டனத்தியைக் கண்டனர். அவனுடன் வாழ்ந்துவந்த மருதியையும்
பார்த்தனர். அவளிடம் ஆதிமந்தி சகல விவரங்களையும் தெரிவித்துவிட்டுத் தன்
காதலனைத் தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கெஞ்சினாள். ஆதிமந்தி கல்லும்
கரையும் வண்ணம் தன் காதல் கதையைக் கண்களில் நீர் வழிந்தோடச் சொன்னாள்.
அதனால் மருதியால் அவள் கோரிக்கையை மறுக்க இயலவில்லை. ஆட்டனத்தியை
ஆதிமந்தியுடன் அனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றபிறகு தன் வாழ்க்கை சூனிய
மாகிவிட்டதை எண்ணி வருத்திக் கடலுள் பாய்ந்து உயிர்நீத்தாள். இச்செய்தி அகநா
நூறு பாடல் 222இல் பரணரால் குறிப்பிடப் பட்டுள்ளது.
"முழவு முகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டனத்தி நலன் நயந்துரைஇத்
தாழிரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த
ஆதிமந்தி காதலர் காட்டிப்
படுகடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்..."
மருதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சங்கப் பாடல்களில்
பல புலவர்கள் ஆதிமந்தி காதலனைப் பிரிந்து பேதுற்று அலைந்த
தையும் பிற்பாடு அவனை மீட்டதையும் குறிப்பிடுகின்றனர்.
.
ReplyDeleteஇந்தக் கேள்வி தேடக் கொஞ்சம் கஷ்டமானது.. நான் சிறு வயதில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் படித்த ஞாபகம்..
ReplyDeleteஒரு படுத்த படுக்கையாக இருக்கும் கணவன். அவன் இறக்க முடியாமல் சுமங்கலியாக இருக்க அம்பாளை வேண்டும் மனைவி.. இந்த நிலையை அந்த நோயாளி கணவனிடம் சொல்லி அந்தக் அந்தக் கணவனே மனைவியை தாலியைக் கழட்டி கொடுக்கும் படி கட்டாயப்படுத்தி... இறக்க மனைவியை சம்மதிக்க வைக்கிறார்...
இந்தக் கதை கிடைக்குமா மீண்டும் படிக்க??